பெருமாள் கோவில் மணியை திருடி சென்ற திருடன்
தருமபுரி அருகே உள்ள சோகத்தூரில் திம்மராய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலை வழக்கம்போல் நேற்று முன்தினம் பூசாரி பூஜை முடித்து விட்டு பூட்டிவிட்டு சென்று விட்டார். மீண்டும் கோவிலை திறக்க நேற்று காலை வந்து கோவிலுக்கு வந்தார்.
அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி ஊர் பொதுமக்களிடம் தகவல் கூறினார். இதனை அடுத்து கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் வந்து கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை பார்த்தபோது கோவிலில் அதிகாலை புகுந்த திருடன் கோவில் கேட்டின் பூட்டை உடைத்து உண்டியலை உடைக்க முயன்றுள்ளான்.
உண்டியலை உடைக்க முடியாத நிலையில் ஆத்திரமடைந்த திருடன் வந்ததற்கு ஏதாவது எடுத்துச் செல்ல வேண்டும் என்று நோக்கத்தில் சாவகாசமாக கோவிலில் இருந்த தீபாராதனை தட்டு, தீர்த்தவட்டல், சடாரி, மணி, மற்றும் உற்சவர் வைக்கும் செம்புத்தகடு ஆகிய பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
மேலும் கோவிலில் சி.சி.டி.வி., இருப்பது கூட தெரியாததால் பதற்றமில்லாமல் பூட்டை உடைத்து கோயிலில் உள்ள பொருட்களை திருடி செல்கின்ற வீடியோ வெளியாகி உள்ளன. கோவில் திருட்டு சம்பவம் குறித்து தருமபுரி நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.