தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு வந்த தனியார் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து .
விழுப்புரத்தில் இருந்து ஐம்பத்தைந்து (55) சுற்றுலா பயணிகளுடன் வந்த தனியார் சுற்றுலா பேருந்து பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் செல்லும் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே ஓட்டுனரின் காட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள சுவற்றில் மோதி இடதுபுறமாக கவிழ்ந்தது.
தகவல் அறிந்த ஒகேனக்கல் காவல் நிலைய ஆய்வாளர். திரு.சுரேஷ் (INSPECTOR)அவர்களின் தலைமையிலான மீட்பு குழு மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று பயணிகளை மீட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் (52)பேர் சிறு சிறு காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் மூன்று (3) பேர்
தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்…
அதிர்ஷ்ட வசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை.
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக…
டாக்டர்.மு.ரஞ்சித்குமார்.
மற்றும் முருகேசன்… 🚔 🚔 🚔