
சென்னையில் ரூ.280 கோடி மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல்
இலங்கையை சேர்ந்த இருவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
54 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் பறிமுதல்.
இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ரூ.280 கோடி மதிப்புடைய போதைப் பொருள் சென்னையில் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, இலங்கையை சேர்ந்த இருவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரம்பூரில் அக்பர் அலி என்பவரிடம் இருந்து 54 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
