விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் 943 திரு சுரேஷ் குமார்.
என்பவர் தனது தலையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு தொடர்பாக மேற்கொண்ட மருத்துவ அறுவை சிகிச்சைக்காக செலவு செய்த தொகை ரூபாய் 7 லட்சத்து 24 ஆயிரத்து 184/- யினையும்
மற்றும் விருதுநகர் ஆயுதப்படையில் பணிபுரியும் தலைமை காவலர் 1144 திரு விஜயராஜ் என்பவர் தனது இடுப்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவச் செலவு ரூபாய் 2 லட்சத்து 54 ஆயிரத்து 340/-யினையும்
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு காவலர் சேம நலநிதி மாவட்ட தலைவராகிய திரு ஸ்ரீனிவாச பெருமாள் எம் ஏ , எம் பி ஏ அவர்கள் தமிழ்நாடு காவலர் சேமநல நிதி மைய குழு நிதியிலிருந்து வழங்கி உள்ளார்.
இதற்கு சிகிச்சை பெற்ற காவலர்களும் அவரது குடும்பத்தாரும் மற்றும் பிற காவலர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்