Police Department News

விலையில்லா வேட்டி, சேலைகளின் விலை 30 ரூபாய். பேரையூரில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள்

விலையில்லா வேட்டி, சேலைகளின் விலை 30 ரூபாய். பேரையூரில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள்

பொங்கலுக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கிய விலையில்லா வேட்டி சேலைகளை தலா 30 ரூபாய் விலையில் வீடுகளுக்கே வந்து வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகைக்கு ஏழை எளியோருக்கு விலையில்லா வேட்டி சேலைகள் வழங்ப்பட்டு வருகின்றன பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி சர்க்கரை ஒரு கரும்பு ரூ. 1000/- ஆகியவையும் வழங்ப்பட்டுள்ளது

விலையில்லா வேட்டி சேலைகளை பழைய இரும்பு வாங்கும் வியாபாரிகள் வீடுகளுக்கே வந்து வேட்டி சேலைகளை தலா ரூ.30/-க்கு வாங்கி செல்கின்றனர் இவை பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. துவைத்தால் சுருங்கி விடுவதாகவும் எனவே வியாபாரிகளிடம் விற்பதாகவும் கூறினார்.

வியாபாரிகளில் சிலர் கூறியதாவது வேட்டி சேலைகளை ரூ. 30/-க்கு வாங்கி மொத்த வியாபாரிகளிடம் ரூ.5 லாபத்தில் விற்று விடுவோம் அவர்கள் துணிப்பை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர் என்றனர்

விலையில்லா வேட்டி சேலைகளுக்காக தமிழக அரசு ரூ.238 கோடி ஒதுக்கி அதில் ஒரு கோடியே 68 லட்சம் சேலைகளை
15 ரகங்களிலும் ஒரு கோடியே 63 லட்சம் வேட்டிகளை 5 ரகங்களிலும் தயாரிப்பாளர்களிடம் கொள்முதல் செய்து ரேசன் கடைள் மூலம் வினியோகிக்கிறது இவைகள் மக்களுக்கு பயன்படும்வகையில் தரமான முறையில் வழங்க வேண்டும் என சமூக ஆர்வளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.