

க்யூ ஆர் (QR )கோடு மூலம், காணாமல் போன 10 குழந்தைகளை மீட்ட பழனி போலீசார்
பழனியில் க்யூ.ஆர்., கோடு வசதியுடன் கூடிய கைப்பட்டை பயன்படுத்தப்பட்டதால் கூட்டத்தில் தொலைந்து போன 10 குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா ஜனவரி 19 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இந்த கூட்டத்தில் பக்தர்கள் தங்களின் குழந்தைகள், உடன் வந்த முதியவர்கள் தொலைந்து போனால் எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் தனியார் நிறுவன உதவியுடன் க்யூஆர் கோடு வசதி ஏற்படுத்தப்பட்டது.
இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து அதில் வரும்பெயர் விலாசம் போன் நம்பர் போன்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம் இதன்படி நேற்று முன்தினம் தைபூசத்தையொட்டி பழனி கோவிலுக்கு வந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு க்யூஆர்கோடு வசதியுடன் கூடிய கைப்பட்டை அணிவிக்கப்பட்டது
இந்த QR கோடு வசதி மூலம் கடந்த இரு தினங்களில் காணாமல் போன 10 குழந்தைகளை உடனடியாக மீட்டு பொற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
