கோவையில் பட்டப் பகலில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு துணிகரக் கொள்ளை!
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதி ஆரோக்கியசாமி வீதியை வசித்து வருபவர் வட மாநிலத்தை சேர்ந்த கமலேஷ். இவர், பருத்தியை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை கமலேஷ் வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருந்த நிலையில் அவரது மகன் மற்றும் ஊழியர்கள் சிலர் வீட்டில் இருந்துள்ளனர். பிற்பகல் கமலேஷ் வீட்டிற்கு கார்களில் வந்த பத்துக்கு மேற்பட்ட கும்பல், கமலேஷின் மகன் உள்ளிட்ட நான்கு பேரை கட்டிப்போட்டு விட்டு வீட்டிலிருந்த நகை மற்றும் 13 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.
பின்னர் கமலேஷ் வீட்டுக்கு வந்த நபர்கள் கட்டிப்போடப்பட்டு இருந்த நான்கு பேரையும் மீட்டு, ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த
ஆர்.எஸ் புரம் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துணை ஆணையர் சரவணகுமார் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து அந்த பகுதியில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.