மதுரை சிந்தாமணி பகுதியில் நண்பரை கத்தியால் தாக்கிய வாலிபர்
மதுரை கீரைத்துறை B4 காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான சிந்தாமணியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் மகன் மணிகண்டன் வயது 25/24, இவர் அனுப்பானடியில் அப்பளக் கம்பெனியில் வேலை செய்து வருகிறார் இவர் கடந்த 11 ம் தேதி மாலை
4 மணியளவில் சிந்தாமணியில் உள்ள ஒரு A.T.M. அருகில் தனது நண்பர்கள் பாஸ்கர் சதீஸ் ஆகியோர்களுடன் பேசி கொண்டு இருந்தார் அந்த சமயம் தன்னுடன் படித்த காக்கா மீசை கார்த்திக் என்பவர் அங்கு வந்து அவரும் பேசிக்கொண்டிருந்தார் பேசி கொண்டிருந்தவர் திடீர் என்று விளையாட்டாக மணிகண்டன் கன்னத்தில் அறைந்தார் அது மணிகண்டனுக்கு வலிக்கவே மணிகண்டன் கார்த்திக்கை கீழே தள்ளி விட்டார் உடனே கார்த்திக் நான் விளையாட்டாகதானே அடித்தேன் நீ ஏன் என்னை தள்ளி விட்டாய் என கூறி இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டனை தாக்கியுள்ளார் இதனால் ரத்த காயம்பட்ட அவரை உடன் இருந்த நண்பர்கள் பாஸ்கரன் சதீஷ் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர் இதனை தொடர்ந்து மணிகண்டன் கீரைத்துறை B4 காவல் நிலையத்தில் புகார் அளித்தார் கீரைத்துறை காவல்நிலைய குற்ற எண் 72/24 ன்படி IPC பிரிவு 294(B), 324, 506(ii) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.