சாலையில் கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவர்களை பாராட்டிய மதுரை போலீஸ் கமிஷனர்
மதுரை சிம்மக்கல் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவன் அப்துல் ரஹ்மான் மற்றும் 7ம்வகுப்பு மாணவன் வினீத் ஆகியோர் பள்ளி முடித்து வீட்டிற்கு புறப்பட்டனர் அவர்கள் மகபூப்பாளையம் ஜின்னா திடல் அருகே நடந்து சென்ற போது அங்குள்ள டீ கடை அருகே சாலையில் மொத்தமாக பணம் கிடந்துள்ளது இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அந்த பணத்தை எடுத்தனர் அதில் ரூ. 13,500/- இருப்பது தெரிய வந்தது இதையடுத்து மாணவர்கள் அந்த பணத்தை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
போலீசார் நடத்திய விசாரணையில் மாணவர்களின் கையில் சிக்கிய அந்த பணம் தத்தனேரி அருள்தாஸ்புரத்தை சேர்ந்த நவீன் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது இதையடுத்து போலீசார் அவரை அழைத்து பணத்தை ஒப்படைத்தனர்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் லோகநாதன் அவர்கள் மாணவர்களின் நல்ல எண்ணத்தை பாராட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார் இதையடுத்து இரு மாணவர்களையும் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்