Police Department News

திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1 லட்சம் மதிப்புள்ள 108 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1 லட்சம் மதிப்புள்ள 108 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி,இ.கா.ப., அவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.
அதன்படி கடந்த 13.03.2024-ந்தேதி, கண்டோன்மெண்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முடுக்குபட்டி சந்திப்பில் வாகன சோதனை செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்துகெண்டிருந்த இரண்டு நபர்களை தனிக்கை செய்தபோது சந்தேகம்படும்படியாக சாக்கு பை வைத்திருந்ததை பிரித்து பார்த்தபோது அதில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போதை பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்த புத்தூரை சேர்ந்த ஜெயராமன் மற்றும் கல்லுகுழியை சேர்ந்த சாதிக்பாட்சா ஆகியோரிடம் பறிமுதல் செய்தும், பின்னர் தொடர் விசாரணை செய்ததில் முடுக்குப்பட்டியில் உள்ள குடோனில் 12 மூட்டைகள் என சுமார் ரூ.1,00,000/- மதிப்புள்ள, 108 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தும், குட்கா பொருட்கள் கடத்த பயன்படுத்திய 2 இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும், மேற்படி எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் எதிரி ஜெயராமன் மீது கண்டோன்மெண்ட் மற்றும் எடமலைப்பட்டிபுதூரில் குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக தலா ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்தது
எனவே, எதிரிகள் ஜெயராமன் மற்றும் சாதிக்பாட்சா ஆகியோர்களின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மெண்ட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்க ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து எதிரிகள் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் திருச்சி மாநகரத்தில், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா பொருள்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.