சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சைக்கிள் பேரணி மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஓவியப்பட்டி, பேச்சுப்போட்டி, ஸ்லோகன், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை(ஜூன் 26) முன்னிட்டு வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி தேனி நாடார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆர்.வி.ஷஜீவனா,இ.ஆ.ப., அவர்களும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.செந்தில்வேலன் அவர்களும், தேனி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன் தலைமையிடம் மற்றும் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.சுகுமார்(CWC) அவர்கள் மற்றும் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்பு பேச்சாளராக திரு.ஜெகன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தில் உள்ள 41 பள்ளிகளைச் சேர்ந்த 560 மாணவ மாணவிகளும் 4 கல்லூரியில் சேர்ந்த 400 மாணவிகளும் மொத்தம் 960 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
மேலும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டது.