குழந்தைகள் தின நாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி சிறுவர்களுடன் தீபாவளியை கொண்டாடிய ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள்
15.11.2020 திண்டுக்கல் மாவட்டம். 14.11.2020 அன்று ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள காவலர் சிறுவர் மன்றத்தில் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சீனிவாசகன் அவர்களின் தலைமையில் தீபாவளி பண்டிகை மற்றும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.பின்பு போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் இனிப்புகள், மற்றும் பட்டாசுகள் வழங்கி அவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். மேலும் குழந்தைகளுக்கு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பது குறித்தும், பட்டாசுகளை கவனமாக பாதுகாப்போடு வெடிக்கும் படியும் அறிவுரை கூறினார்கள்.
