Police Department News

இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்

ராமேஸ்வரம் : படகில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை இலங்கை நீர்கொழும்பு பகுதியில் கடற்படையினர் கைப்பற்றினர்.

இலங்கை மேற்கு பிராந்திய கடல் பகுதியில் நேற்று முன்தினம் அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கை நீர்கொழும்பு கடல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த படகின் அருகில் சென்ற கடற்படையினர் படகு முழுவதும் சோதனை செய்தனர்.

இதில் படகின் அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 மூட்டைகளை கைப்பற்றி பிரித்து பார்த்தனர்.

உள்ளே 600 கிலோ பீடி இலைகள் இருந்தது. இலங்கையில் இதன் மதிப்பு ரூ.10 லட்சம்.

படகுடன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் தமிழகத்தின் கடலோரப் பகுதியில் இருந்து படகு மூலம் மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கை நீர்கொழும்பு பகுதிக்கு கடத்தப்பட்டவை என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.