
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் திருமணமான தனது தங்கையின் கள்ள காதலனை பலிவாங்க வாளுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது
மதுரை மாநகர் ஜெயந்திபுரம் B6 காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெரு கிருஷ்ணா ரைஸ் மில் அருகே ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அன்புதாசன் அவர்கள் நிலைய காவலர்களுடன் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கடந்த 30 ம் தேதி காலை 8 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கையில் பெரிய வாளுடன் வாலிபர் ஒருவர் வந்தார் வந்தவர் போலீசாரை கண்டவுடன் தப்பியோட எத்தனித்தார் உடனே சுதாரித்து கொண்ட போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
விசாரித்ததில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த கலைஞர் தெருவில் வசித்து வரும் முருகேசன் மகன் திவாகர் வயது 23 என தெரிய வந்தது. இவரது தங்கை தீபிகா இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு சென்னையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரும் ஓடிப்போனதாகவும் அவரை பழிவாங்கும் நோக்கத்தோடு வாழுடன் சுற்றி திரிவதாக கூறினார்.
அவர் குற்றத்தை ஒப்பு கொண்டு கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவரிடமிருந்த வாளை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர்.
