Police Recruitment

19 ஆண்டுகளாக சுற்றுச்சூழலை காக்க போராடும் ‘ஆணி மனிதன்’ சுபாஷ் சீனிவாசன் – சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களின் சேவை நமது மதுரையில்

19 ஆண்டுகளாக சுற்றுச்சூழலை காக்க போராடும் ‘ஆணி மனிதன்’ சுபாஷ் சீனிவாசன் – சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களின் சேவை நமது மதுரையில்

நமக்கு தேவையான சுத்தமான காற்று, நிழல், கனிகள், போன்றவற்றைத் தரும் மரங்களை ஆணிகளால் குத்தி காயப்படுத்தி மனிதன் விளம்பரம் தேடுவது தொடர்கிறது இந்த மரங்களுக்கும் மனம் உண்டு, உணர்வுகள் உண்டு என அதில் அடித்துள்ள ஆணிகளை அகற்றி விடுவதே தன் கடமையாக செய்து வருகிறார் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ ., சுபாஷ் சீனிவாசன் இவர் மதுரையில் புதிய சட்டங்கள் குறித்து பயிற்சி பெற வந்த போது அண்ணா நகர் பகுதியில் மரங்களைக் கண்டதும் அதன் மீது அடித்துள்ள ஆணிகளை அகற்ற ஆரம்பித்தார்

இவர் கூறியதாவது ஒரு சமயம் போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டிருந்தபோது மரம் ஒன்றில் ஆணியை அடித்து விளம்பரப் பலகைகள் இருப்பது கண்டு வேதனை அடைந்தேன். இதனால் 15 ஆண்டுகளாக ஓய்வு நேரங்களில் விளம்பரப் பலகைகளை அகற்றி வருகிறேன். மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மாட்டுத்தாவணி, தமுக்கம் , தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் 25 மரங்களில் ஆணிகளை அகற்றினேன் மரத்தின் ஆணி அடிப்பதால் அதன் வளர்ச்சி தடைப்பட்டு போய் விடுகிறது இதனால் பல மரங்களை நாம் இழந்து விடுகிறோம் அவைகளுக்கும் உயிர் இருக்கிறது நம்மைப் போல உணர்ச்சிகளும் உண்டு என்கிறார் இவரை வாழ்த்த வேண்டுமென்றால் இவரது பணியை பாராட்ட தொடர்பு எண். 83000 38265.

Leave a Reply

Your email address will not be published.