
சாலை விபத்தில் மரணமடைந்த காவலர் குடும்பத்திற்கு விபத்து நிவாரண தொகை வழங்கிய காவல் ஆணையர்
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிந்த முதல் நிலை காவலர் 4001
திரு.சங்கர பாண்டியன் அவர்கள்
கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பணி முடித்து வீடு திரும்புகையில் தெப்பக்குளத்தில் நடைபெற்ற வாகன விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவலரின் குடும்பத்திற்கு
SBI விபத்து நிவாரண உதவி தொகை
ரூபாய் 70,00,000 க்கான காசோலையை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் வழங்கினார் . ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை மேலாளர் திரு. அருண்குமார் மற்றும் அலுவலக அதிகாரிகள் உடன் இருந்தனர்
