
தாராபுரத்தில்,யானை தந்தம் & மான் கொம்பு விற்பனைக்கு கடத்தி சென்ற போது, வனசரக துறையினரிடம் சம்பவ இடத்தில் கையும் களவுமாக சிக்கினர்.
இதில் நான்கு பேர் அதிரடி கைது..
தாராபுரம், ஜூலை 06-
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வனசரகத்திற்கு உட்பட்ட காங்கயம்,தாராபுரம் போன்ற பகுதிக்கு உட்பட்ட, உடுமலை புறவழி சாலையில் யானைத் தந்தம் மான் கொம்பு போன்ற பொருட்களை கடத்தி செல்வதாக காங்கேயம் வனசரகர்க்கு தொலைபேசி மூலம் ரகசிய தகவல் அளிக்கப்பட்டது,தகவல் அடிப்படையில் விரைந்து சென்ற காங்கேயம் வனசரகர் மோனிகா, வனவர் ஷேக் உமர் மற்றும் திருப்பூர் வன சரகத்தினர் உடுமலை ரவுண்டானம் அருகே சந்தேகம் அடிப்படையில் இருந்த நான்கு நபர்களை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததால், நான்கு நபர்களையும் காங்கேயம் வனசரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணையில் அவர்கள் கொடைக்கானல் போன்ற பகுதியில் பழைய யானை தந்தம் மற்றும் மான் கொம்புகளை தாராபுரம் பகுதியில் விற்பனைக்காக அழைத்துச் சென்றோம் என ஒப்புக் கண்டனர் இந்த விசாரணையில் தாராபுரம் அலங்கியம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் ரமேஷ் (53), திண்டுக்கல் மாவட்டம் பழனி குதிரை ஆறு பகுதியை சேர்ந்த சாந்தப்பன் மகன் சுப்ரமணி (60),அதே பகுதியைச் சேர்ந்த குமார் மகன் தேனு (எ) தேனரசு (36) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பாப்பம்பட்டியை சேர்ந்த தன்னாட்சி மகன் செல்வராஜ் (50) ஆகியோரிடம் இருந்த இரண்டு யானை தந்தம் மான் கொம்பு போன்ற பொருட்களை பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டு பின்னர் 4 குற்றவாளிகளையும் தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு குற்றவியல் நடுவர் திருமதி உமா மகேஸ்வரி அவர்களை கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தாராபுரம் பகுதியில் யானை தந்தம் மற்றும் மான் கொம்புகளை விற்பனைக்காக கொண்டு சென்றதால் அவர்களை கைது செய்த சம்பவம் தாராபுரம் பொதுக்களிடம் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.




