National Police News Police Department News

மதுரை மாவட்டத்தில் (PART TIME JOB ) ஆன்லைன் மூலம் பணம் பெற்று தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது

மதுரை மாவட்டத்தில் (PART TIME JOB ) ஆன்லைன் மூலம் பணம் பெற்று தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது

மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குற்றச் செயலில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 28.06.2024-ம் தேதி மதுரை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை Part time job வேலை தருவதாக கூறி ஏமாற்றி ரூபாய் 1,32,06,883/-ஜ ஆன்லைன் பண மோசடி செய்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்கு பதிவு செய்து மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையால் எதிரிகளின் வங்கிக் கணக்குகளிலிருந்து ரூபாய் 2,18,50,150/- முடக்கம் செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக குற்றறவாளியை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

மேற்படி குற்ற சம்பவம் தொடர்பாக வாதி எதிரிகளுக்கும் Part time Job வேலைக்காக பணம் அனுப்பிய வங்கிக் கணக்குகளை பின் தொடர்ந்து புலன் விசாரணை செய்த போது Indusind வங்கிக் கணக்கை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் ஆன்லைன் பண மோசடி செய்வதற்கு உடந்தையாக இருந்த நபர்கள் பாண்டிச்சேரி நடேசன் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் வடிவேலு, ஏழுமலை மகன் ஜெயராமன் மற்றும் விழுப்புரம் மாவட்டம் தொளாமூரைச் சேர்ந்த கண்ணன் மகன் ராமலிங்கம் என்பது தெரிய வந்தது. மேற்படி எதிரிகள் போலியாக நடப்பு வங்கிக் கணக்கு ஒன்றினை ராமலிங்கம் மூலமாக தொடங்கி சைபர் கிரைம் குற்றவாளிகள் பொதுமக்களிடம் ஆன்லைன் பண மோசடி செய்வதற்கு உடந்தையாக இருந்ததும் இந்த வங்கிக் கணக்கு மூலம் ஒரு கோடி ரூபாய் பண பணபரிவர்த்தனைக்கு ரூபாய் ஒரு லட்சம் கமிஷன் பெற்றதும் தெரியவந்தது மேற்படி எதிரிகளை காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் பாண்டிச்சேரி சென்று கைது செய்து அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய லேப்டாப், செல்போன், சிம் கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ATM கார்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த குற்றவாளிகள் ஆந்திரா, ஜம்மு காஷ்மீர், கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், திரிபுரா, தெலுங்கானா, சண்டிகர், குஜராத் கர்நாடகா உத்தரபிரதேசம் மற்றும் தமிழகத்தின் பல பகுதியில் பொதுமக்களை ஆசை வார்த்தை கூறி சைபர் குற்றவாளிகள் மூலம் ஆன்லைன் பணங மோசடி செய்து ரூ.1.5 கோடி வரை பணம் பெற்று ஏமாற்றி கைவரிசை காட்டி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது .

இந்நிலையில் குற்ற சம்பவம் தொடர்பாக குற்றவாளிகச யாரென்று என்று கண்டறிந்து கைது செய்த தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டியதோடு மற்ற குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய அறிவுறுத்தினார்கள்

மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளதோடு பண மோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்பு கொண்டு அல்லது இதர சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்கவும் மதுரை புறநகர் மாவட்ட மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.