
கோவைவில் போதை வாலிபர் ஓடும் ரயிலில் இளம் பெண்ணிற்கு முத்தம்
மனிதன் நார்மலாக இருக்கும் போது அக்காள் தங்கையாக தெரியும் பெண்கள், மது போதைக்கு அடிமையாகி விட்டால் அவர்கள் போகப் பொருளாக தெரிவதும் கண்டவர்களிடம் அடி வாங்கி அசிங்ப்படுவதும் மதுவினால். மனிதன் நார்மலாக இருக்கும் போது தனது ஆடைகள் சிறிது அவிழ்ந்தாலும் கேவலமாக நினைக்கும் மனிதன் மது அருந்தியதும் தனது ஆடைகளை தானே அவிழ்து போட்டு கேவலப்படுவதும் மதுவாலேதான். யாரும் சாக்கடையில் போய் பாடுப்பது இல்லை மது அருந்தி விட்டால் சாக்கடையும் அவனுக்கு சொர்க்கம். இப்படித்தான் கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவர் மது போதையில் ஒரு இளம் பெண்ணிற்கு முத்தம் கொடுத்து பொது மக்களிடம் அடி வாங்கி அவமானப்பட்டு போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் தன் பெற்றோருடன் ரயிலில் பயணம் செய்தார் அப்போது அதே ரயிலில் பயணம் செய்த 40 வயது நபர் மது போதையில் அந்த இளம் பெண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளார் இதனால் பொது மக்களிடம் தர்மஅடி வாங்கி அசிங்ப்பட்டு போலிசாரால் கைது செய்யப்பட்டார்.
மனிதன் மது போதையை தவிர்த்து கௌரவமாக வாழ வேண்டும்
