சர்வதேச இணைய வழி குற்ற தடுப்பு நாளை முன்னிட்டு மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது
இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்த் அவர்கள் பேசியதாவது
கல்வி உதவித்தொகை என்ற பெயரில் மாணவர்களை குறி வைத்து மோசடி நடக்கிறது. நமது அலைபேசி எண்ணை எங்கிருந்தோ பெற்று நமது விவரங்களை அறிந்து கொண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளதால் ஸ்காலர்ஷிப் பெற தகுதி பெற்று விட்டீர்கள் எனக் கூறி உதவித்தொகை அனுப்ப நடைமுறை கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறி சில ஆயிரம் ரூபாய் பெற்று மோசடி செய்வது தொடர்கிறது. எந்த முயற்சியும் எடுக்காமல் எப்படி உதவி தொகை கிடைக்கும் என்று நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.
கூடுதல் ஏடிஎஸ்பி கருப்பையா பேசியதாவது 2021 முதல் இந்த ஆண்டு நவம்பர் வரை சைபர் கிரைம் வழக்குகளில் 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இதில் 77 பேர் பட்டதாரிகள் அவர்களில் 25 பேர் பி.இ., எம்.பி.ஏ படித்தவர்கள் பணமோசடி மட்டும் சைபர் க்ரைம் அல்ல சமூக வலைதளத்தில் தேவையற்ற படங்களை அப்லோடு செய்வது பிறர் பாதிக்கும் வகையில் ரீல்ஸ் வெளியிடுவதும் இக்குற்றங்களே. உதாரணமாக 50 வயது பெண் குளிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் அப்லோடு செய்யப்பட்டது இது குறித்த புகாரை விசாரித்த போது அப்பெண்ணின் தங்கை மகனான கல்லூரி மாணவர் அப்லோடு செய்தது தெரியவந்தது அவர் மீது நடவடிக்கை வேண்டாம் என அவர்கள் கூறினார் இதை நீதிமன்றத்தில் கூறுங்கள் என தெரிவித்து மாணவனை கைது செய்தோம்.
மற்றொரு சம்பவத்தில் சட்டக் கல்லூரி மாணவியர் 3 பேரை சக மாணவி ஒருவர் குரூப் போட்டோ எடுத்து நடுவில் உள்ள பெண்ணிடம் பேச ஆசையா என்னை தொடர்பு கொண்டு ஜிபேயில் பணம் அனுப்புங்கள் எனக் கூறி சமூக வலைதளத்தில் அப்லோடு செய்தார் பணம் அனுப்பியவருக்கு மாணவியின் அலைபேசி எண்ணை தந்தார். அந்த நபர் தினமும் இரவு ஃபோன் பேசி டார்ச்சர் செய்தார் இப் புகாரையும் விசாரித்து சகமாணவியை பிடித்தோம். செமஸ்டர் தேர்வு இருந்ததால் அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராகிறேன் என்றார். அவரது நலன் கருதி கைது செய்யாமல் அனுப்பி வைத்தோம் ஒரு மாதமாகியும் விசாரணை வராததால் வேறு வழியின்றி கைது செய்தோம் என்றார்.
மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் 2021 தொடங்கிய போது ரூபாய் 70 லட்சம் மோசடி நடந்ததாக 513 புகார்கள் வந்ததன. 2022ல் ரூ.3.57 கோடி தொடர்பாக 839 புகார்கள் வந்தன.
2023 ரூபாய் 6.15 கோடி மோசடி தொடர்பாக 136 புகார்கள் வந்தன அடுத்து 2024 நவம்பர் வரை ரூபாய் 12 கோடி மோசடி தொடர்பாக 1456 புகார்கள் வந்துள்ளன.
பண மோசடிக்கு ஆளானால் உடனே இலவச டோல் ஃப்ரீ என் 1930ல் தொடர்பு கொள்ள வேண்டும் உங்கள் புகாரை ஏற்றதற்கான 14 இலக்க எண்கள் தரப்படும். முதல் 3 எண்கள் உங்கள் புகாரை ஏற்றதற்கான. எண்கள். அடுத்த இரண்டு எண்கள் தமிழ்நாடு, அடுத்த இரண்டு எண்கள் எந்த மாதம் என்பதும் அடுத்த ஏழு எண்கள் உங்கள் புகார் எண்ணை குறிக்கும்.