
மதுரையில் சாலை போக்குவரத்தில் விபத்துகளை தடுக்க போக்குவரத்து காவல்துறை உள்பட பல்வேறு துறையினர் ஆய்வு
மதுரை மாநகரில் வாகனப் போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துக்களை குறைக்கும் வகையில் போக்குவரத்து போலிசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் நேற்று மதுரை காளவாசல், பை பாஸ் ரோடு பகுதியில் சாலை விபத்தினை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்ககொண்டனர் இதில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு.இளமாறன், திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி, மருத்துவத் துறை ஆகியோர்கள் கலந்து கொண்டு விபத்து தடுப்பு சிறப்பு அறிக்கை சமர்ப்பித்தனர்

