
T-15 கண்ணகி நகர் போலீஸ்க்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயர் 23. 02.2025 ம் தேதி சுமார் 17.00 மணியளவில் T- 16 கண்ணகி நகர் காவல் நிலையம் கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பு அருகில் வைத்து 1, நிவேதா@ முசல் வ/27,க/பெ பூச்சி@சரத்குமார், எண்:,62,5 வது மாடி, பிளாக்-13, பெரும்பாக்கம் சென்னை-131,2) சலீம் ஷாரிப் வ/23,த/பெ மசூத் ஷாரிப், எண்:19/48, சத்தியமூர்த்தி நகர் வியாசர்பாடி, சென்னை-39,3) பிரமிளா வ/28 க/பெ அன்சர், முத்துமாரியம்மன் கோவில் தெரு, அத்மா நகர், சைதாப்பேட்டை, சென்னை, மற்றும் 4) கார்த்திக் வ/27,த/பெ ராஜி, எண்:62,5 வது மாடி, பிளாக்- 13, பெரும்பாக்கம் சென்னை- 131 என்பவர்களை சோதனை செய்ததில் சுமார் 14 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த கஞ்சாவினை ஓடிஸா மாநிலத்தில் இருந்து வாங்கி வந்து கண்ணகி நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கூலித் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதாக கூறியதை தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். இது சம்பந்தமாக கண்ணகி நகர் காவல் நிலைய குற்ற எண்: 95/2025,u/s 8 (c),20(b) (B), 29 NDPS Act-ன் படி வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் 23.02.2025 ம் தேதி சுமார் 07.15 மணியளவில் பள்ளிக்கரணை, காமக்கொடி நகர், பேருந்து நிலையம் அருகில் வைத்து 1, தட்சிணாமூர்த்தி வ/20 ,த/பெ, விக்னா மூர்த்தி, எண் :13/81,10 வந்து தெரு, பொன்னியம்மன் மேட்டு, சென்னை, 2) சைஹ புஹாரி வ/23, தபே நாகூர் மீரான்,எண:5,மேலப்பா குறுக்கு தெரு, அயனாவரம், சென்னை-23,த/பெ 3) பிரகாஷ் ராஜ் வ/27 த/பெ சீனிவாசன், எண் : HP-2, ட்ரைனிடி பார்க் , பாரதியார் நகர், முக்கியம் துரைப்பாக்கம், சென்னை -97 என்பவர்களை சோதனை செய்ததில் சுமார் 8.500 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த கஞ்சாவினை டார்ஜிலிங்கில் இருந்து வாங்கி வந்து பள்ளிக்கரணை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ளவர்களுக்கும் மற்றும் தொழிலாளர்களுக்கும் விற்பனை செய்வதாக கூறியதை தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். இது சம்பந்தமாக பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவு குற்ற எண் ,Cr 13/2025 u/s 8 (c),20(b) (B), 29 NDPS Act-ன் படி வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் 2 வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட ஏழு நபர்களையும் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் முன்பு ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
மேலும் இவ்விதமான நடவடிக்கைகள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குற்றங்களை தடுக்கும் முயற்சிகள் காவல்துறையால் தீவிரப்படுத்தி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
