
மதுரை காவல் ஆணையர் உத்தரவின்படி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. லோகநாதன் IPS அவர்களின் உத்தரவின்படி சாலை விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து விதி மீறல்களை தடுக்கும் பொருட்டு போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர் அந்த வகையில் மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருமதி வனிதா அவர்களின் உத்தரவின்படி நேற்று திலகர் திடல் போக்குவரத்து காவல் சரகத்திற்கு உட்பட்ட சேதுபதி பள்ளி சிக்னல் அருகே
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நிகழ்வு நடைபெற்றது இந்த விழிப்புணர்வு நிகழ்வில் போக்குவரத்து உதவி ஆணையர்கள் செல்வின், இளமாறன் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
