
மதுரை செல்லூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 2017 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம்
மதுரை மாநகர் செல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான புது விளாங்குடி பகுதியைச் சேர்ந்த விருமாண்டி என்பவரது மகன் சச்சிதானந்தம் வயது 40 என்பவரை கொலை செய்தது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மகன் பூமிநாதன் வயது 43 என்பவரை கைது செய்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 12/03/25 அன்று நீதிமன்றத்தீர்ப்பு வெளியாகி உள்ளது தீர்ப்பின்படி மேற்படி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் 10,000/- ரூயாய் அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட செல்லூர் காவலர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்.
