
வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு காவல்துறையின் முக்கிய அறிவிப்பு
பண்டிகை கால விடுமுறை, கோடை விடுமுறை போன்ற நாட்களில் விடுமுறையை கழிப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெகுநாட்கள் வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது வீட்டின் அருகிலுள்ள காவல்நிலையங்களில் தகவல் தெரிவித்து விட்டு செல்லவும், இச்செயல் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், ரோந்து பணியிணை சிறப்பாக செய்திடவும் காவல்துறையினருக்கு உதவும், ஏனெனில் சமூக விரோதிகள் பெரும்பாலும் பூட்டிய வீடுகளை குறிவைத்தே திருட்டு போன்ற குற்றசம்பவங்களில் ஈடுபடுகின்றனர்
