Police Department News

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்த காவல் துறைக்கான இலவச பேருந்து பயண அட்டையை ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையினருக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்கள்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்த காவல் துறைக்கான இலவச பேருந்து பயண அட்டையை ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையினருக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்கள்

தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருந்த காவல்துறையினருக்கான இலவச பேருந்து பயண அட்டையை (Free Bus Pass) இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்தர் சுக்லா, இ.கா.ப., அவர்கள் இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினருக்கு வழங்கினார்.

காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று காவலர் முதல் ஆய்வாளர் வரை அவர்களுக்கு அரசால் வழங்கப்படும் பிரத்தியேக பயண அட்டையை பயன்படுத்தி அரசு பேருந்துகளில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் பணி நிமித்தமாக இலவசமாக பயணம் செய்யலாம் என்றும், இதற்காக நவீன அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருந்தார்.

அதன்படி 15.03.2025 அன்று இராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரியும் 891 நபர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட இலவச பேருந்து பயண அட்டையினை (Free Bus Pass) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.