
மதுரை மாநகர காவல் துறைக்கு துப்பறியும் நாய் படைப் பிரிவுக்கு வாங்கப்பட்ட புதிய நாய்க்குட்டிக்கு புகழ் என பெயர் சூட்டிய காவல் ஆணையர்
மதுரை மாநகர காவல் துறையில் துப்பறியும் நாய் படை பிரிவிற்கு புதிதாக பிறந்த 40 நாட்களே ஆன லேபரடாப் வகையைச் சேர்ந்த நாய்க்குட்டி வாங்கப்பட்டுள்ளது. இந்த நாய்க்குட்டிக்கு மாநகர காவல், காவல் ஆணையர் அவர்கள் புகழ் என பெயர் சூட்டினார். ஏற்கனவே இந்த துப்பறியும் நாய் படை பிரிவில் ஏழு நாய்கள் பராமரிக்கப்பட்டு வெடிகுண்டு கண்டுபிடிப்பு கொலை கொள்ளை திருட்டு வழக்குகளில் காவல்துறை புலன் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த லேபரடாப் நாய் குட்டியை பத்து மாதங்கள் வரை நன்றாக வளர்க்கவும் அதன் பின்னர் போதை பொருட்கள் கண்டுபிடிப்பு தடுப்பு சம்பந்தமான பயிற்சிகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாநகர குற்ற பதிவேடு உதவி ஆணையர் திரு ஜெயராமன், ஆய்வாளர்
திரு.தர்மர் மற்றும் துப்பறியும் நாய் படை பிரிவு சார்பு ஆய்வாளர்
திரு.ராஜேந்திரன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
