
மதுரை சீமான் நகர் பகுதியில் திருடு போன இருசக்கர வாகனம் போலிசாரின் வாகன சோதனையில் பிடிபட்டது
நேற்று 20.03.2025 ந்தேதி மதுரை மாநகர் திலகர் திடல் போக்குவரத்துகாவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட டைட்டன் ஷோரூம் சிக்னல் அருகே போக்குவரத்து சார்பு ஆய்வாளர்
திரு.லிங்ஸ்டன் மற்றும் தலைமை காவலர்.1418 விஜயன், தலைமை காவலர் .த.க. 3094 முகம்மது ரபீக் ஆகியோர்கள் வாகனத் தணிகை செய்து கொண்டிருந்த போது நம்பர் பிளேட் இல்லாமல் ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தை ஒருவர் ஓட்டி வந்தார் அவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்த போது அவர் கீழ முத்துப்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரது மகன் ஹரி பிரகாஷ் வயது 20 என்பது தெரியவந்தது. மேலும் விசாரணை செய்த பொழுது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். காவல் துறையின் தீவிர விசாரணைக்கு பின் மேற்படி இரு சக்கர வாகனம் மாட்டுத்தாவணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சீமான் நகர் பகுதியில் திருடியதை ஒப்புக்கொண்டார். இருசக்கர வாகனமானது காணாமல் போனது குறித்து மதுரை மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர் புகார் அளித்து தேடி வந்த நிலையில் வாகன தணிக்கையின் போது பிடித்த போக்குவரத்து சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் சிறப்பாக பணி செய்தமைக்கு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.
