

மதுரை மாநகரில் பணிபுரியும் காவலர்களின் கல்லூரியில் பயிலும் 157 குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை மதுரை போலிஸ் கமிஷனர் வழங்கினார்
மதுரை மாநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோரின், கல்லூரியில் பயிலும் குழந்தைகள் 157 நபர்களுக்கு 2023-2024 ஆண்டிற்கான தமிழ்நாடு காவலர் நல நிதியிலிருந்து (TNPBF) வழங்கப்படும் சிறப்பு கல்வி உதவித்தொகை
ரூ. 26,27,000/-யை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர்.
ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் அதிகாரிகள், காவலர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் என பலர் கலந்துகொண்டனர்..
