Police Department News

தீயணைப்பு வீரர்களுக்கு மூன்று மாத பயிற்சி துவக்கம்

தீயணைப்பு வீரர்களுக்கு மூன்று மாத பயிற்சி துவக்கம்

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் 2023 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களில் 636 பேர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர். அவர்களில் 100 பேருக்கு மதுரை கிடாரிப்பட்டி லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தற்காலிக பயிற்சி பள்ளியில், அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது தீ மற்றும் விபத்து காலங்களில் எவ்வாறு செயல்படுவது தீயணைக்கும் முறைகள் உயிர் மீட்பு பணிகள் குறித்து பயிற்சிகள், நீச்சல் பயிற்சிகள், முதலுதவி பயிற்சி உள்ளிட்ட துறை சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

நேற்று துவக்க விழா நடந்தது தென் மண்டல தீயணைப்பு துணை இயக்குனர் ராஜேஷ் கண்ணன் துவக்கி வைத்தார். மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன் வரவேற்றார், கூடுதல் அலுவலர் திருமுருகன் நிலைய அலுவலர்கள் கந்தசாமி, அசோக்குமார், உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

இவர்கள் மூன்று மாத பயிற்சிக்கு பின் தீயணைப்பு நிலையங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.