
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலையத்தில்
கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிடியானை எதிரி கைது.
தென்காசி மாவட்டத்தில் சிவகிரி காவல் நிலையம் குற்ற எண் 228/ 2020 SC/ST act வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மீனாட்சி நாதன் அவர்கள் உத்தரபடி சிவகிரி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் இதயத்துல்லா மற்றும் தலைமை காவலர் செல்வம் தலைமையில் வழக்கின் எதிரி ராஜா கனி த/ பெ பொன்னையா நாடார் தேனி மாவட்டம் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
