Police Department News

மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளரின் விபத்தில்லா பயணத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வு

மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளரின் விபத்தில்லா பயணத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வு

மதுரை மாநகரில் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தினால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல்களும் வாகன விபத்துகளும் ஏற்படுவது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து காவல் துறையினர் பொது மக்களுக்கு போதுமான விழிப்புணர்வுகளை அவ்வப்போது ஏற்படுத்தி வருகின்றனர் இதன் தொடர்ச்சியாக மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு தங்கமணி அவர்கள் திலகர் திடல் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மதுரை ரயில்வே சந்திப்பு மற்றும் பேருந்து நிலையம் அருகில் பொது மக்களுக்கு பாதுகாப்பாக சாலையை கடப்பது பற்றியும் பாதுகாப்பாக பேருந்தில் பயணம் செய்வது பற்றியும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் பெரும்பாலான சாலை விபத்துக்கள் அவசரம் மற்றும் பொறுமையின்மையின் காரணமாக ஏற்பட்டு வருகிறது சாலைகளை கடக்கும் பொழுது பொறுமையாகவும் அவசர மின்றியும், பஸ்ஸில் பயணம் செய்யும் பொழுது படிக்கட்டில் நின்று பயணம் செய்யாமல் சீட்டில் அமர்ந்து பயணம் செய்யவும் வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.