
திருப்பரங்குன்றம் கோயில் காவல் நிலையம் திறப்பு
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு என தனியாக அமைக்கப்பட்ட புதிய காவல் நிலைய திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட காவல் நிலைய திறப்பு விழாவுக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜதுரை அவர்கள் தலைமை வகித்தார். கோயில் அறங்காவலர் குழு தலைவர் ப. சத்யப்ரியா பாலாஜி அறங்காவலர்கள் வ. சண்முகசுந்தரம் மணிச் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை தெற்கு காவல் துணை ஆணையர் திரு. இனிகோ திவ்யன் புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்தார். இதில் திருப்பரங்குன்றம் உதவி ஆணையர் திருமதி,சசி பிரியா கோயில் துணை ஆணையர் சூரியன் நாராயணன் திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதுரை வீரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த காவல் நிலையத்தில் ஓர் ஆய்வாளர் தலைமையில் 29 காவலர்கள் செயல்படுவர்.
