
மதுரையில் 332 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, தல ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
கடந்த 10. 11. 2020. ஆம் தேதி அன்று கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிரமான வேட்டை மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்
இந்த நிலையில் மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான முத்துப்பட்டி அவனியாபுரம் செல்லும் வழியில் யோக விநாயகர் கோவில் சந்திப்பு அருகில் வந்த ஈச்சேர் கண்டெயினர் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 332 கிலோ கஞ்சாவை கைப்பற்றி அதை கடத்தி வந்த மதுரை மாவட்டம் கட்டத்தேவன் பட்டியைச் சேர்ந்த ராமு என்பவரின் மகன் மலைச்சாமி வயது 29, மற்றும் ஈரோடு மாவட்டம் சென்னிமலை எக்கட்டாம் பாளையத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சண்முக பிரபு வயது 30 ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது இவ்வழக்கின் சாட்சிகள் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது
இந்த நிலையில் நேற்று ( 29.04.25 ) சாட்சிகள் விசாரணை முடிவுற்று மலைச்சாமி மற்றும் சண்முக பிரபு ஆகியோர் நீதிமன்றம் விசாரணையில் குற்றவாளிகள் என நிரூபணம் ஆனதால் இவர்களுக்கு தல 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் தலா ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது
இந்த வழக்கு சிறப்பாக செயல்பட்ட சுப்ரமணியபுரம் காவல் நிலைய காவல்துறையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.
