
பெண் காவலர்களுக்கு நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும் பயிற்சி
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பெண் காவலர்கள் ஓட்டுநர் பணியில் சேரும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் உத்தரவின் படி ஆயுதப்படையில் பெண் காவலர்களுக்கு நான்கு சக்கர வாகனத்தை இயக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சிக்குப் பிறகு, ஆயுதப்படை காவல் வாகனத்திற்கு முதல் முறையாக பெண் காவலர் செல்வி.பிரியதர்ஷினி ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளார்…
