
தமிழ்நாடு போலீஸ் டிராபிக் வார்டன், மதுரை சிட்டி அமைப்பின் ஆண்டு பொதுக்கூட்டம் (AGM)
29.06.2025 ஞாயிற்று கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் மதுரை, மகபூப்பாளையம் அருகே உள்ள ப்ரடக்டிவிட்டி கவுன்சில் ஹாலில் தமிழ்நாடு போலீஸ் டிராபிக் வார்டன், மதுரை சிட்டி அமைப்பின் ஆண்டு பொதுக்கூட்டம் (AGM)
சிறப்பாக நடைபெற்றது.
டெபுட்டி சிப் டிராபிக் வார்டன் திரு பி.சி. சௌந்தர்ராஜ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அமைப்பின் ஆண்டறிக்கையை சீப் டிராபிக் வார்டன் திரு. டி.தவமணி அவர்கள் வழங்கினார். இதில் 2024-25ஆம் ஆண்டில் நடைபெற்ற ரெகுலர் மற்றும் ஸ்பெஷல் கால்அவுட்கள், பரேடு உள்ளிட்ட பணிகள் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டெபுட்டி கமிஷனர் ஆஃப் போலீஸ் (டிராபிக்) திருமதி எஸ்.வனிதா, டெபுட்டி கமிஷனர் ஆஃப் போலீஸ் (ஏ.ஆர்.) திரு ஏ.திருமலைகுமார், அசிஸ்டன்ட் கமிஷனர் ஆப் போலீஸ் (டிராபிக்) திரு செல்வின் மற்றும் திரு இளமாறன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
20 ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்த வார்டன்களுக்கு நீண்ட சேவை விருது, சிறந்த திட்ட அதிகாரிகளுக்கான விருதுகள், அதிக வருகை பதிவிட்ட வார்டன்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து வார்டன்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் வந்திருந்த போக்குவரத்து ஆய்வாளர்கள் தங்கமணி கார்த்திக் தங்ப்பாண்டி ரமேஷ் பூரண கிருஷ்ணன் ஆகியோர்கள் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சி நன்றியுரையுடன் முடிவடைந்தது. பின்னர் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
