
சட்ட வகுப்பு பயிற்சியுடன், பயிற்சி அதிகாரிகளுக்கு ஆயுதம் கையாளுதல், கராத்தே, யோகா, விளையாட்டு, நீச்சல் மற்றும் ஓட்டுநர் பயிற்சி போன்ற வெளியரங்க செயல்பாடுகளிலும் நுட்பமான பயிற்சியளிக்கப்படும். தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையுடன் (STF) 10 நாட்கள் இணைந்து, வனப் பகுதிகளில் வரைபட ஆய்வு, முகாம் பாதுகாப்பு, வழிகாட்டும் முறை, மலையேறுதல் போன்ற சிறப்புப் பயிற்சிகளும் அளிக்கப்படும். முக்கிய பாதுகாப்பு பணி மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரடியாக அழைத்து செல்லப்பட்டு களப்பயிற்சியும் வழங்கப்படும்.
தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் வழங்கப்படவுள்ள மேற்படி பயிற்சிகளை தொடர்ந்து, 28 வார மாவட்ட நடைமுறை பயிற்சிக்கு அனுப்பப்பட்டு இரண்டாம் கட்ட பயிற்சியாக மீண்டும் தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் பயிற்சி வழங்கப்படும். 20 வார இரண்டாம் கட்ட பயிற்சியில், பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசு துறைகளின் நிர்வாகம் சார்ந்த. பல்வேறு வழக்குகளை கையாளுகின்ற விதம் குறித்தும் துறைரீதியான விசாரணைகளை மேற்கொள்வது குறித்தும் பயிற்சி வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில், திரு. T.P.சுரேஷ் குமார், இ.கா.ப., துணை இயக்குநர் (பயிற்சி), தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். விழா நிறைவில், முனைவர். T.செந்தில் குமார், இ.கா.ப., துணை இயக்குநர் (நிர்வாகம்), தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
