
சாலையில் கேட்பாரற்று கிடந்த 17. 50 லட்சம் ரூபாயை காவல்துறையிடம் அளித்த நேர்மையான மனிதரை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்
கடந்த 27.10.2025 அன்று இரவு மதுரை மாநகர் விளக்குத்தூண் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், சாலையோரம் கிடந்த 17.50 இலட்சம் ரூபாயை மீட்டு, உரிய நபரிடம் சேர்க்கும் பொருட்டு காவல்துறையினர் வசம் ஒப்படைத்த திருமதி . செல்வமாலினி என்பவரின் நேர்மையை பாராட்டும் விதமாக, 28.10.2025 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து மதுரை மாநகர காவல் சார்பாக பொன்னாடை அணிவித்து பாராட்டுசான்றிதழ் மற்றும் பணவெகுமதி வழங்கி தனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தார்


 
                            


