
மதுரையில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் நாசவேலை தடுப்பு நடவடிக்கை
10.11.2025 அன்று செங்கோட்டை மெட்ரோ நிலையம்/புது தில்லி அருகே கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததை முன்னிட்டு
11.11.2025 அன்று, காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, வெடிகுண்டு கண்டறியும் குழுவுடன் துணை உதவி ஆய்வாளர், ரயில்வே பாதுகாப்பு படை ஊழியர்களுடன் மற்றும் மோப்பநாய் ஆஸ்டின் ஆகியோர் மதுரை ரயில்வே நிலைய மேற்கு நுழைவு வளாகம், மேற்கு நுழைவு மல்டிலெவல் கார் பார்க்கிங் பகுதி, இரு சக்கர வாகன நிறுத்துமிடம் பகுதி, நடைமேடை கள் பகுதியில் நாசவேலை தடுப்பு சோதனை நடத்தி இரயில் எண் 16327, , 16731 மற்றும் 22671 ஆகியவற்றில் ஆய்வு செய்தனர்.
சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான அல்லது குற்றஞ்சாட்டும் பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, மேலும் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை





