குடிபோதையில் தவற விட்ட குழந்தையை மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு
மேற்படி படத்தில் காணும் குழந்தையின் பெயர் மாதேஷ் இவரை இவருடைய தந்தை ராசன் என்பவர் குடிபோதையில் அவருடைய தாய்க்கு தெரியாமல் திருப்பூர் தெக்கலூர் என்ற இடத்திலிருந்து அந்த குழந்தையை எடுத்து வந்துவிட்டார். குடிபோதையில் திருப்பூர் மாநகர அவிநாசி ரோடு RTO ஜங்ஷன் முன்பு குடிபோதையில் ரோட்டில் இங்கும் அங்குமாக உலாவிக் கொண்டிருந்த வரை திருப்பூர் மாநகரம் வடக்கு முதல் நிலை காவலர் 751 திரு.ராமகிருஷ்ணன் என்பவர் விசாரணை செய்தார். விசாரணையில் அவர் அந்த குழந்தையை அவருடைய மனைவிக்கு தெரியாமல் எடுத்து வந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடமிருந்த முகவரியில் அவருடைய மனைவிக்கு தகவல் சொல்லி வரவழைத்து அந்தக் குழந்தையை ஒப்படைத்தார் இந்த சம்பவத்தை அறிந்த திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன் அவர்கள் அந்த காவலரை வெகுவாக பாராட்டினார்கள்.
போலீஸ் இ நியூஸ்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்
மு. சந்திர சேகர்