Police Department News

குடும்பப் பிரச்சினையில் ஒருவரை கொலை செய்த இருவருக்கு ஆயுள்தண்டனை

குடும்பப் பிரச்சினையில் ஒருவரை கொலை செய்த இருவருக்கு ஆயுள்தண்டனை.

17.07.2018-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழக்கொடுமலூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் அவரது மனைவி போதும்பொண்ணு மற்றும் அவரது சகோதரர் வேல்முருகன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையில், போதும்பொண்ணு மற்றும் வேல்முருகன் ஆகியோர் சேர்ந்து ஆறுமுகத்தை தாக்கி கொலை செய்ததையடுத்து அபிராமம் காவல் நிலைய குற்ற எண். u/s 342,449,302 IPC-ன் பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை முடிந்து இன்று 18.03.2020-ம் தேதி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு.சண்முகசுந்தரம் அவர்கள் மேற்படி எதிரிகளான A1 – போதும்பொண்ணு என்பவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் 2,000/- ரூபாய் அபராதமும், A2 – வேல்முருகன் என்பவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் 2,000/- ரூபாய் அபராதத்துடன் மேலும், 05 ஆண்டுகளுடன் 1,000/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.