சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
நாளுக்கு நாள் வாகனத்தின் தேவையும்,அதன் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன, இதனால் எங்கும்,எதிலும் வாகனமயமாகிக்கொண்டிருக்கிறது,இதனால் கண்மூடித்தனமான வேகம் கை,கால்,உயிரிழப்பும் ஏற்படுகிறது, இந்த பேராபத்திலிருந்து பொதுமக்களை காக்கவேண்டும் என்று தமிழக அரசால் சாலை பாதுகாப்பு வாரவிழா கடைபிடிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களின் முன்னிலையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு குறித்து அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.மாரிமுத்து,திரு.ஆனந்த் ஆகியோர் சாலைபோக்குவரத்து விதிமுறைகளை எளிதில்புரியும்படி எடுத்துக்கூறினார்,இவை தவிர அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் உட்கோட்டத்திற்குட்பட்ட பல இடங்களில் போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல் துறையினரால் மிகச்சிறப்பாக நடைபெற்றது பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக அருப்புக்கோட்டையிலிருந்து
VRK.ஜெயராமன்MA,Mphil மாநிலசெய்தியாளர்