சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து நபர் கைது
திருப்பூர் மாநகர அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வேலம்பாளையம் ஆய்வாளர் திரு. முருகையன் (I/O)
அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் _திரு.விவேக் குமார் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது
சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உப்பிலிபாளையம் குளக்கரை அருகில் நெரிப்பேரீச்சல் சேர்ந்த மாரிமுத்து(60) மற்றும் ஆனந்தன்(46) மற்றும் அர்த்தநாரீஸ்வரர்(30) செல்வராஜ்(30) பாஸ்கரன்(54) ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது மேலும் அவரிடம் இருந்து ரூபாய் 4,200 பறிமுதல் செய்து மேற்கண்ட நபர்களை கைது செய்தனர்.மேலும் இந்த செயலை செய்த ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார்(IPS) மற்றும் காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன் (IPS)அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள் .
போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்