செல்போன் கடையை உடைத்து செல்போன்கள் மற்றும் பொருள்கள் திருட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியை சேர்ந்த ராஜாராம் மகன் சிவமுத்து வயது( 30) செல்போன்கள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் கடையை பூட்டி விட்டு வழக்கம்போல் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சிவமுத்துக்கு தொலைபேசி மூலம் கடை உடைக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அலறியடித்து ஓடி வந்து பார்த்த சிவமுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடையில் இருந்த ஜெராக்ஸ் மிஷின் 1, செல்போன்கள் 8, லேப்டாப் 1, ரொக்கப்பணம் 12,500 ஆகியவை திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. உடனே இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் சார்பு ஆய்வாளர் திரு. கண்ணா காந்தி, வாணி ஆகியோர்கள் தலைமையில் போலீசார் விரைந்து சென்று திருடு போன சம்பவம் குறித்து விசாரணை வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். நிலக்கோட்டை பொருத்தவரை கடந்த நான்கு மாதங்களுக்கு பின்பு நேற்று முன்தினம் நிலக்கோட்டையிளும், சிலுக்குவார்பட்டியிலும் நடந்த திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் இ நியூஸ் K.பூவரசன் திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்