தூத்துக்குடி மாவட்டம்
நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் குடும்பத்தை தாக்கிய நபர் கைது
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கூசாலிப்பட்டியை சேர்ந்தவர் பேச்சிராஜா, (28) இவரும், அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் என்ற பாண்டிச்சாமி (20), என்பவரும் நண்பர்கள்.
பேச்சிராஜாவின் இரு சக்கர வாகனத்தை சசிகுமார் இரவல் வாங்கிக் கொண்டு பஜாரில் செல்லும் போது வாகனத்தோடு கீழே விழுந்ததில், இரு சக்கர வாகனம் பழுதாகி விட்டது. அதை சரி செய்வதற்கு ரூபாய் 8000/− ஆகியுள்ளதாக பேச்சிராஜா சசிகுமாரிடம் பணம் கேட்டுள்ளார், அதில் ரூபாய் 2000/− மட்டும் கொடுத்திருக்கிறார், சசிகுமார். மீதி பணத்தை தருமாறு பேச்சிராஜா கேட்டதில் ஆத்திரமடைந்த சசிகுமார் அவரையும், அங்கு இருந்த அவரது தாயார் மற்றும் மாமாவையும் கூரைத் தகடுகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது குறித்து பேச்சிராஜா அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. அங்குதாய் அவர்கள் வழக்கு பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரையிலிருந்து
M.அருள்ஜோதி
செய்தியாளர்