விருதுநகர் மாவட்டம்:-
ராஜபாளையம் தனியார் நூற்பாலை எதிரே முட்புதரில் அழுகிய நிலையில் பெண் பிரேதம் மீட்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் தனியார் நூற்பாலை உள்ளது .
இந்த நூற்பாலை முன்பு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் பின்னால் புதர்மண்டி கிடக்கிறது .
இந்த புதரிலிருந்து கடந்த இரண்டு நாட்களாக நாற்றம் அடித்ததாக ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது அழுகிய நிலையில் பெண் பிரேதம் கிடப்பது கண்டறியப்பட்டது.
புதரை விலக்கிப் பார்த்தபோது அணிந்திருந்த ஆடை விலகியிருந்த நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது .
இறந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து புதரில் வீசி விட்டுச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
பிரேதத்தின் அருகில் பின்னல்கூடை ஒன்று காணப்பட்டது .
அதையும் கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு சூழ்நிலை உருவாகியுள்ளது.
