சொத்துக்காக மகனால் தங்கள் உயிருக்கு ஆபத்து எனக்கூறும் முதிய தம்பதியினர்
சொத்துக்காக பெற்ற மகனால் உயிருக்கு ஆபத்து எனக் கூறி மதுரையில் ஒரு முதிய தம்பதி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். வாடி பட்டி எரம்பட்டியை சேர்ந்த பாண்டியன், ராஜா பொண்ணு என்ற தம்பதி குடியிருந்த வீட்டில் அபகரித்துக் கொண்ட மகன் சந்திரசேகரன் பெற்றோரை வீதிக்கு விரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் 7 ஏக்கர் நிலத்தை எழுதி தருமாறு மிரட்டிய மகன் தங்களை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்தனர். அங்கு பாதுகாப்புக்காக இருந்த போலீசார் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர்.
