இராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு ஊராட்சியில் இலங்கைக்கு கடத்தயிருந்த மஞ்சள் டன் கணக்கில் பறிமுதல்
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் இருந்து இலங்கைக்கு கடற்கரை மார்க்கமாக கடத்த இருந்த 93 மூட்டைகள் 2 டன் மஞ்சள் பறிமுதல்.
கடத்த இருந்தவர்கள் தப்பி ஓட்டம் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே காடுங்காடு கிராமத்தில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக மஞ்சலை கடத்த இருந்த தகவல் இராமநாதபுரம் கியூ ப்ராஞ்ச்க்கு ரகசியமாக கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் காரங்காடு பகுதியை ரகசியமாக கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மஞ்சள் மூடைகளை கடத்த முயன்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்ய வந்த நிலையில் காரங்காடு கடற்கரை அருகே உப்பு நீரை குடிநீராக்கும் திட்டத்தின் படி செயல்படுத்த உள்ள அறையில் 93 மஞ்சள் மூட்டைகள் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து கண்காணித்து வந்த காவல்துறையினர் இன்று அதிகாலை 4 மணியளவில் மஞ்சள் முட்டைகளை கடற்கரை மார்க்கமாக கடத்த இருந்த போது காவல்துறையினர் சுற்றி வளைத்தனர் கடத்த இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
க்யூ பிராஞ்ச் போலிசார் 93 மஞ்சள் மூடைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். ஒரு மூட்டையில் 25 கிலோ வீதம் 2325 கிலோ 2 டன்னிற்கு மேல் மஞ்சலை கைப்பற்றி இதை யார் இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்த இருந்தார்கள் அவர்களுக்கு எங்கிருந்து மஞ்சள் கிடைத்தது. இந்த மஞ்சள் மூடைகளை இங்கு கொண்டு வந்தவர்கள் யார் யார் உள்ளுரில் யாரேனும் உடந்தையாக உள்ளார்கள என விசாரித்து வருகிறார்கள்.
