கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் (02.10.2020) அன்று துவக்கி வைத்தார் .
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று, சென்னை பெருநகரில் மேலும் பரவாமல் தடுக்கும்விதமாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, உலக அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற சங்கம் (World Constitution and Parliament Association) சார்பில் உருவாக்கப்பட்ட கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் 02.10.2020 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திரு.ரவி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.