பொதுமக்களின் உயிரை குடிக்கும் கொரோனாவை விரட்டும் போரில் தென்னக ஜான்சிராணியாக திகழும் அம்மையார் மரியாதைக்குரிய க.ராணி அவர்கள் போக்குவரத்து காவல்துறை புலனாய்வு பிரிவு ஆய்வாளர் மவுண்ட் ஸ்டேஷன்
மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் மவுண்ட் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் உள்ள ஈச்சங்காடு சிக்னல், காமாட்சி மருத்துவமனை சிக்னல், குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் சிக்னல், மீனம்பாக்கம் சிக்னல் போன்ற இடங்களில் பாதசாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், வாகன ஓட்டிகள், வாலிபர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் ஆகிய அனைவரும் பயன்படும் வகையில் விழிப்புணர் பலகை மூலமாகவும் துண்டுபிரசுரம் மூலமாகவும் நடனம்மூலமாகவும் இசை வாத்தியங்கள் மூலமாகவும் நாடகமூலமாகவும் பாடல்கள் மூலமாகவும் அன்பாகவும் மரியாதையாகவும் தாயுள்ளத்தோடு ஒவ்வொருவருக்கும் இலவசமாக முககவசம் ,கிருமி நாசினி வழங்கியும் சமூக இடைவெளி விட்டு சாலையை கடக்கும்படியும் சோப்பு மூலம் கை கழுவும் படியாகவும் இருமல் தும்மல் வரும்போது கர்ச்சிப் பயன்படுத்தும்படி யாகவும் ஊட்டச்சத்து உணவு உண்ணும்படியாகவும் நல்ல உடற்பயிற்சி செய்யும்படியாகவும் நன்மையான அறிவுரைகளை வழங்கினார்.அதுமட்டுமல்லாமல் தன்னுடைய சொந்த ஊதியத்தில் இருந்து சாலை ஓரங்களில் இருக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு சத்தான உணவு மற்றும் மருந்துகள் போன்றவையும் வழங்கி வருகிறார்.மனிதநேயமிக்க செயல்களை மரியாதைக்குரிய திருமதி.க.ராணி போக்குவரத்து காவல்துறை புலனாய்வு பிரிவு ஆய்வாளர் மவுண்ட் ஸ்டேஷன் அவர்கள் பொதுமக்களுக்கு சேவை என்று கருதாமல் தியாகமாக செய்து வருகிறார்.இந்த நன்மையான செயல்களில் ஈடுப்பட்ட திரு.ரவிகராயர் உதவி ஆய்வாளர் புலனாய்வு பிரிவு மற்றும் திரு.கருணாநிதி SSI மற்றும் பாலாஜி SSI புலனாய்வு பிரிவு ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.காவலதுறையினருக்கு உதாரணமாக திகழ்கிறார் மரியாதைக்குரிய க.ராணி போக்குவரத்து காவல்துறை புலனாய்வு பிரிவு ஆய்வாளர் அவர்கள்.